நெட்டிசன்:

சிவராஜா ராமநாதன் (Sivarajah Ramanathan) அவர்களின் முகநூல் பதிவு:

மாற்றத்தை விதைக்க நினைக்கும் யாரும் ஒன்றை மறந்து விடக்கூடாது. OPS அவர்கள் எளிமையான மனிதர், ஒப்பீட்டளவில் குறைந்த ஊழல் வாதி, மற்றவர்களுக்கு எவ்வளவோ பரவாயில்லை போன்ற நிலைப்பாட்டை மட்டுமே நாம் எடுக்க வேண்டும். அவரால் நாம் நினைக்கும் மாற்றத்தை தர முடியாது. He is best among the worst. அவ்வளவே. அவருடன் இருக்கும் நத்தம் விசுவநாதன் போன்றவர்களுக்கும் சசிகலாவுக்கும் கொள்ளையின் அளவும் அதற்கான வழி முறையையும் தான் வேறுபாடே தவிர நோக்கம் என்னவோ ஒன்று தான். இப்போது அவர் OPS இன் முக்கிய கூட்டாளி.

மேலும் இன்று ஜெயலலிதாவை ஏதோ ராஜ ராஜ சோழன் அளவுக்கு நல்லாட்சி புரிந்ததாக ஒரு மாயைக்குள் தள்ளப்படுகிறோம். மதுரை போன்ற நகரங்களில் தி.மு.க வினரால் உருவாக்கப் பட்ட ரவுடிகளின் பிரச்னையை தடுத்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டினார் என்ற ஒன்று தான் அவரது மிகப்பெரிய சாதனை. அதற்காகத்தான் அவர் மறைந்த போது பாராட்டினேன். மற்றபடி எப்படி சசியையும் அவரையும் ஊழல் விசயத்தில் பிரித்து பார்க்க முடியும் என்று தெரியவில்லை.

இப்போது இருக்கும் கட்சிகள் தலைமைகள் அனைத்தும் எந்த பெரிய மாற்றத்தையும் தரும் என்ற நம்பிக்கை இல்லை. நாம் தமிழரும், பா.ம.க வும் நிறைய பேசுகிறார்கள். ஆனாலும் நிறைய நெருடலும் இருக்கிறது.

இன்னொரு பக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தல் தமிழகத்தின் தலை மேல் தொங்கிக் கொண்டி ருக்கிறது. அது அனைத்து பலங்களும் நிறைந்த ஒன்று.

ஊழலும் அற்ற பாசிசமும் அற்ற ஒரு அரசியல் கலாச்சாரம் தான் தீர்வு. அது தான் இன்றைய கட்டாயமான தேவை.

Necessity is the mother of all inventions.
கட்சிகளை மாற்றுவதால் எந்த பெரிய பலனும் உருவாகப் போவதில்லை. அரசியல் கலாச்சாரத்தை மாற்றினால் மட்டுமே மக்களுக்கு விடிவு காலம். We don’t need the the so called Dravidian or the Ariyan parties. Lets invent a new model and culture for simple good governance. அதை செய்வதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று யோசியுங்கள். மனமிருந்தால் மார்க்கமுண்டு. Experienced and young minds together should innovate a solution for the state.

Having said all these, the best low hanging fruit for the moment is without any doubt Mr.OPS. Lets support him foe the moment and hope for the best.