சென்னை:  சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக்காதீங்க விஜய் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில்,   அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சித்த நடிகர் விஜய், பாசிசம் குறித்து விமர்சிப்பவர்களை கடுமையாக சாடினார். மதவெறி சக்திகளுக்கு எதிராக தனது கட்சி “சித்தாந்த ரீதியாக” மற்றும் “திராவிட மாதிரி” – ஊழல் சக்திகளை “அரசியல் ரீதியாக” தூண்டும் சக்திகளுக்கு எதிராக போராடும் என்று அறிவித்தார்.

அதே சமயம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரைச் சொல்லி, திராவிட மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு தமிழகத்தைச் சூறையாடும் சுயநலக் குடும்பமே நமது அடுத்த எதிரி, அரசியல் எதிரி ” என்றார்.

அவர் பாசிசத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் என்று அவர் நம்பிய கட்சிகளைத் தாக்கினார், . “பாசிசம், பாசிசம், பாசிசம் என்று கதறும் மக்களிடையே பெரும்பான்மை சிறுபான்மை பிரிவினை பற்றிய அச்சத்தை உருவாக்குவதே சிலரது முழு நேர வேலை” என்று கூறிவிட்டு, “அவர்கள் பாசிசம்னா,  நீங்கள் பாயசமா என கேள்வி எழுப்பினார்.

“ஊழல் மற்றும் மக்களை ஏமாற்றுபவர்களை எதிர்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்திய தேர்தல் ஆணையம், 2026ல், ஜனநாயகப் போரின் தேதியை [தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைக் குறிக்கும்] முடிவு செய்யும். அன்றைய தினம் 234 தொகுதிகளிலும் டிவிகே சின்னத்திற்கு மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் வெடிகுண்டு போல இருக்கும் என காட்டமாக பேசினார்.

விஜயின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தி.நகரில் திருமதி சௌந்திரா கைலாசம் இலக்கிய பரிசு பெற்ற “பஞ்சவர்ணம்” நாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் , “விஜய் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார். அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துகள். புதிய கட்சியின் கோட்பாடாக ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று சொல்லி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியினுடைய சில கொள்கைகளை வலியுறுத்தி பேசி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதில் சில வாசகங்கள் மகிழ்ச்சி தரவில்லை.

“பாசிசமா பாயாசமா என்ற விஜய் பேச்சு சினிமா வசனம் போல் இருக்கிறது என்றவர் விஜய்,   சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று அறிவுரை கூறினார்.

மேலும்,  ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது சாத்தியமா, சாத்தியம் இல்லையா என்பதை தேர்தல்தான் முடிவு செய்யும். இப்பொழுது எப்படி சொல்ல முடியும்?  இன்று சாத்தியமில்லாதது எல்லாம் ஒரு காலத்தில் சாத்தியமாகலாம். அவரது பேச்சு இது சினிமா வசனம் போல் இருக்கிறது. சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்தார்.