சென்னை:
ரும் 25ஆம் தேதி தமிழகத்தில் உள்நாட்டு விமான சேவை தொடங்க வேண்டாம் என மத்தியஅரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.
மத்தியஅரசு நாடு முழுவதும் வரும் 25ந்தேதி (மே மாதம்) உள்நாட்டு பயணிகள் விமான சேவை தொடங்க உத்தரவிட்டு உள்ளது. அதற்காக பல நிபந்தனைகளையும் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகத்திலும், மே 25 முதல், சென்னை, கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த  நிலையில், தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், கொரோனா தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதால், ஜூன் மாதத்திற்கு பிறகு விமான சேவையை தொடங்கலாம் என கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]