தேசபக்தியை காட்டுவதாக நினைத்து ராணுவ தகவல்களை, ராணுவம் தொடர்பான டாங்கிகள் மற்றும் அதிநவீன ஆயுதங்களின் படங்களை சமூக வலைதளங்களில் பகிராதீர்கள் என்று இந்திய ராணுவம் குடிமக்களுக்கு எழுத்து மற்றும் ஆடியோ வடிவில் எச்சரிக்கை அனுப்பியுள்ளது. அப்படி பகிர்வது நமக்கே வினையாக முடியலாம் என்று அது எச்சரிக்கிறது.
மேலும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளான ஏர்மார்ஷல் ரந்தீர் சிங், பிரிகேடியர் குல்தீப்சிங் சந்த்புரி ஆகியோர் இதுபோன்ற படங்களை சமூக வலைதளங்களில் பரப்பும் மக்களின் நோக்கம் நல்லதாக இருக்கலாம் ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் நமக்கு பாதகமாக அமையக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள்.
அதுமட்டுமன்றி ராணுவவீரர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும், ஆயுதங்களை கைகளில் வைத்துக்கொண்டு, டாங்கிகள் அருகில் நின்றுகொண்டு போட்டோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.