Skip to content
  • Thu. Jul 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

 நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது! ரஜினி மக்கள் மன்றம் திடீர் எச்சரிக்கை

Dec 19, 2020
சென்னை:  நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து நடிகர் ரஜினிகாந்த் , ஜனவரியில்  தொடங்க உள்ள கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்துள்ளார். இந்த நிலையில், ரஜினியின் கட்சியின் பெயர்  ‘மக்கள் சேவை கட்சி’ என்றும், அந்த கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்,  நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து   ரஜினி மக்கள் மன்றம்,  மாவட்ட செயலாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் போது பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர். பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது. சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டும்.
மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25-ம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.  ரஜினி கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post navigation

பேரம் படிந்ததா? ‘டார்ச் லைட் சின்னம்’ வேண்டாம் என எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி திடீர் ‘பல்டி’
தேர்தல் அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணியாற்றக்கூடாது! தமிழகம் உள்பட 5மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar
உலகம்

மோசே மர்மத்தைத் தீர்க்க உதவும் விவிலிய காலத்து சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு

April 24, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer