நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர்  Thirugnanam  Mylapore Perumal முகநூல் பதிவு

 

பன்னீரு…
கொஞ்சம்
நில்லுங்கோ !

பஞ்சாபை
பார்த்து
காப்பியடிக்காதீர் !

தெலங்கானா
வழியை
Follow
செய்யுங்கள் !

◆ இதோ Details :
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் சுபாஷ் ரெடி மரம் ஸ்மரன் (SMARAN) என்ற அமைப்பின் தலைவர்,
கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற அவர் பாடுபட்டு வருகிறார் !

● ஒவ்வொரு போர்வெல்லும் பல லட்ச ரூபாய் மதிப்புடையது. ஆனால் அவை வறண்டு போனாலோ, அல்லது தோன்றியபின் நீர் கிடைக்காமல் போனாலோ அப்படியே பாழடைய விட்டுவிடுகிறார்கள் !

●ஆனால், அவற்றில் மிக எளிதாக மழைநீரை சேகரித்து வைக்கலாம் – “இன்வர்ஸ் போர்வெல் டெக்னிக்’
(INVERSE BOREWELL TCHNIQUE – IBW ) என்று அதற்குப் பெயர் !

● ஸ்மரன் அமைப்பினர், கைவிடப்பட்ட போர்வெல்களைக் அடையாளம் கண்டு, அவற்றுக்கு மேல் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கி, பாதுகாப்பான முறையில் அவற்றை ‘சீல்’ செய்துவிடுகிறார்கள் !

● சில நேரங்களில் இரண்டு அல்லது 3 குழாய் கிணறுகளை ஒருங்கிணைத்து ஒரு சிறிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பையே உருவாக்குகிறார்கள் !

● சேமிப்புக்கு வழி இல்லாதபோது, முற்றிலுமாக குழாய் கிணறுகளை பாதுகாப்புடன் மூடி விடுகிறார்கள் !
இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது என்பது, கண்டறியப்பட்டு உள்ளது….