சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கரூர் சம்பவம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் சபாநாயகர் இருக்கைக்கு எதிராக அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

செப்டம்பர் 27ந்தேதி அன்று தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதங்கள் நடைபெற்றது. இந்த விபத்து குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம்நடைபெற்றது.
எடப்பாடியின் பேச்சின்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு பேசியதால், அதிமுக எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் சிவசங்கர் சொன்ன கருத்துகளுக்க அதிமுகவினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதையடுத்து சபாநாயகருக்கு எதிகராவும், சபாநாயகர் அதிமுகவினர் விஷயத்தில் ”ஓரவஞ்சனை செய்யவதாகவும் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, ஓரவஞ்சனை செய்யாதே என்ற கோஷடத்துடன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை எடு.. நடவடிக்கை எடு.. ஓரவஞ்சனை செய்யாதே” என அவர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து சபாநாயகர் இருக்கையையும் சூழந்து முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு இருக்கையில் அமருங்கள் என்று கேட்டப்போதும் தொடர்ந்து அவையில் கூச்சலிட்டு வந்த நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சுமார் 5 நிமிடங்கள் தர்ணா செய்த அதிமுக எம்எல்ஏக்கள், பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவு தான் காரணம் என கூறி பாஜகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.