https://www.instagram.com/p/B-Ki6acJeD-/

கொரோனா வைரஸுக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலக பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இந்த நிலையில் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“ஒரு நாள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் குறித்து நமது பேரக் குழந்தைகளிடம் சொல்லுவோம். நமது வேலைகள், வழக்கமான காலை நடைப்பயிற்சி, நீண்ட தூரப் பயணம், பிடித்த உணவகங்களில் உணவு, திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், வீட்டுக் கொண்டாட்டங்கள், சுற்றுலா மற்றும் நமது உயிர்கள் என அனைத்துக்கும் அச்சுறுத்தல் இருந்த காலம்.

இந்த பித்துப் பிடிக்கும் சூழலை நாம் எப்படிக் கையாண்டோம் என்பதே அவர்கள் கேட்க விரும்பும் கதையாக இருக்கும். ஒரு புதிய நாளைப் பார்க்க நாம் உயிர் பிழைத்தோம். இந்தக் கதையைக் கெடுக்காதீர்கள்.

இப்படிக்கு

க்ளைமாக்ஸ்

என தெரிவித்துள்ளார்.