கொரோனாவால் பாதிக்கப் பட்ட ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை குழந்தைகள் அனைவரும் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் தங்கள் பூரணமாக குணமடைய காரணமாக இருந்த எங்கள் லாரன்ஸ் அங்கிள் மற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும், கடவுளிடம் எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி சொன்னதோடு இல்லாமல் தாங்கள் சேமித்து வைத்திருந்த 10300 ரூபாய் பணத்தை கொரோனாவால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கினார்கள்.

ராகவா லாரன்ஸ் மற்றவர்களுக்கு உதவி செய்வதோடு இல்லாமல் தான் வளர்க்கும் குழந்தைகளுக்கும் அதை சொல்லி கொடுத் திருப்பது பெருமைக்குரியது. அதை இக்குழந்தைகள் கடைப்பிடித்து வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.