வாஷிங்டன்: செவ்வாயின் ஒரு பகுதிதான் நிலவு என்ற அமெரிக்க அதிபரின் கருத்தால், வானியல் ஆர்வலர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
“நாம் செலவு செய்துவரும் பெரும் தொகையின்பொருட்டு, நாம் 50 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்த்திய நிலவுக்கு செல்வதைப் பற்றி நாம் பேசாமல் இருக்க வேண்டும்.
நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய வேலைகளைப் பற்றி நாசா சிந்திக்க வேண்டும். செவ்வாய் (நிலவு அதன் ஒரு பகுதி), பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆகியவை குறித்தானதாக அவை இருக்க வேண்டும்” என்று டிவீட் செய்துள்ளார் டிரம்ப்.
நிலவு என்பதை செவ்வாயின் ஒரு பகுதியாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க அதிபரின் இந்தக் கருத்துதான் தற்போது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அத்தகைய ஒரு கருத்து இதுவரை அறிவியல்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்படவில்லை.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக, பூமியின் அளவுள்ள ஒரு பொருளோடு பூமி மோதியதால், உருவான ஒன்றுதான் நிலா என்பதே முக்கிய அறிவியல் கோட்படாக உள்ளது. செவ்வாய் என்பது நிலவிலிருந்து 140m மைல்கள் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.