மாஸ்கோ: ரஷ்யாவின் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உலோகத்தாலான ஒரு ரயில்வே ஆற்றுப் பாலத்தின் பெரிய பகுதியை திருடர்கள் திருடிச் சென்ற விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் ஆர்க்டிக் பிராந்தியத்தில் ஓடும் அம்பா நதியின் குறுக்கே ஒரு உலோக பாலம் அமைந்திருந்தது. அந்த பாலத்தில் 23 மீட்டரை திடீரென காணவில்லை. அதாவது, 56 டன் உலோகம் திருடு போயுள்ளது.

திருடுபோன பால பகுதியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைந்துள்ள பகுதி மிகவும் உள்புறமான ஒரு பகுதியாகும்.

அதனால்தான் இவ்வளவு பெரிய திருட்டு சர்வசாதாரணமாக நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. திருடுபோன பாலத்தின் உடைந்த பகுதிகள் வேறு எங்கும் கண்டறியப்படவில்லை.

பாலத்தின் பாகங்களை முதலில் ஆற்றில் விழச்செய்து, பின்னர் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து எடுத்துச் சென்றுள்ளனர் திருடர்கள் என்று கூறப்படுகிறது.