சென்னை: காவல்துறையால் தேடப்பட்டு வந்த விழுப்புரம் தாதா மணிகண்டன், சென்னை கொரட்டூரில் நிகழ்ந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காவல்துறையால் சமீபகாலமாக தேடப்பட்டு வந்த இவர், சென்னை கொரட்டூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவரைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தனிப்படை போலீசார் அங்கு சென்றனர்.
ஆனால், காவல்துறையிடம் சரணடைய மறுத்த தாதா மணிகண்டன், ஆயுதங்களால் போலீஸை தாக்கினார். இதனையடுத்து தனிப்படையினர் சுட்டதில், குண்டுபாய்ந்து மரணடைந்தார் தாதா மணிகண்டன்.
இந்த தனிப்படைக்கு விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சென்னையில் சிறிதுகால இடைவெளிக்குப் பிறகு, என்கவுண்டரில் தாதா கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.