டாக்கா,

சியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் இந்தியா நுழைந்துள்ளது.

வங்க தேச தலைநகர் டாக்காவில் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 11ந்தேதி முதல் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் இருந்து  8 அணிகள்  பங்கேற்று விளையாடி வருகிறது.

பங்கேற்ற இந்தப் போட்டியின் 4வது சுற்றில் விளையாட இந்தியாவும், பாகிஸ்தானும் தகுதி பெற்றிருந்தன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்கான போட்டியில்,  இடைவேளை வரை இரு அணிகளுக்கும் கோல் எதுவும் போடாமல் பரபரப்பாக விளையாடியது.

தொடர்ந்து துடிப்பாக ஆடிய இந்திய அணியினர்  39-வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டனர். இந்திய வீரர்  சத்பீர் சிங் ஒரு கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து மன்பிரீத்சிங், லலித் உபாத்யாய், குர்ஜந்த் சிங் ஆகியோர் அடுத்தடுத்து தொடர்ந்து கோல்கள் அடித்து தூள் கிளப்பினர்.

இந்திய அணியினரின் ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத பாகிஸ்தான் திண்டாடியது. ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்று  இறுதிப் போட்டியில், மலேசிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது.