செயின்ட் லூயிஸ்:

நாய் ஒன்று போனை கடித்து விளையாடிய போது, எதிர்பாராமல் போலீஸாரின் 911 என்ற அவசர அழைப்புக்கு சென்று விட்டது. விரைந்து வந்த போலீஸார் நாயுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.


அமெரிக்காவின் மின்னசோட்டா என்ற இடத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் பார்க்கில் உள்ள வீடு ஒன்றில் நாய் தனியாக இருந்தது.

அங்கிருந்த செல்போனை வாயில் கடித்து விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராமல் போலீஸாரை அவசரத்துக்கு அழைக்கும் 911 என்ற எண்ணை அந்த நாய் அழுத்திவிட்டது.

சிறிது நேரத்தில் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். வீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

நாயைப் பார்த்தபோது, அதன் வாயில் செல்போன் இருந்தது. வாயில் வைத்து விளையாடி நாய், தவறுதலாக போலீஸாரின் அவசர எண்ணை அழுத்தியது தெரியவந்தது.

அந்த நாயை பாராட்டி படத்துடன் அந்த செய்தியை போலீஸார் பகிர்ந்துள்ளனர்.

இதேபோன்று 919 என்ற அவசர எண்ணை நாய்கள் அழுத்தி போலீஸாரை வரவழைத்த 2 சம்பவங்கள் நடந்துள்ளன.

தொடுதிரை மூலம் அவசர காலத்தில் நாய்கள் அழைக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு பணி நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.