திருவள்ளூர்:
அதிமுக அரசு அரசு பணத்தில் விளம்பரம் செய்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் மரியாதை குறைவாக ஒருமையில் பேசி வருகிறார் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் சாட்டினார்.
அதிமுக அரசு, அரசு பணத்தில் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் விளம்பரம் செய்து வருகிறது என்றும் குற்றம் சாட்டிய மு.க. ஸ்டாலின், அதிமுக அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் விலைவாசி வெகுவாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]