சென்னை: மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது…. அரசியலா? என  முதல்வர்  மு.க.ஸ்டாலின்  கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், மத அரசியலும், சாதிய அரசியலும், வன்முறைகளும் அதிகரித்து வரும் நிலையில், மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது…. அரசியலா? என கேள்வி எழுப்பி உள்ளார். அமைதியாக நடைபெற்று முடிந்திருக்க வேண்டிய திருப்பரங்குன்றம் மலை கார்த்திகை தீபம் விவகாரத்தை, தேவையின்றி போலீசாரை குவித்து மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி, அதன்மூலம் நீதிமன்ற உத்தரவை தடுத்த திமுக அரசு, தற்போது , அதைக்கொண்டு அரசியல் செய்கிறது. ஆனால் பழியை மற்ற கட்சிகள் மீது சுமத்துகிறது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள  எக்ஸ் தள பதிவில்,

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்.

மெட்ரோ இரயில், #AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்! –

இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது! என்று கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் இரவோடு இரவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு