சென்னை,

ட்டக் கல்வி ஆவணங்கள் திடீர் மாயம் காரணமாக  42 வழக்கறிஞர்களுக்கு தமிழக பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது வழக்கறிஞர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன்,  வெள்ளை, கருப்பு சீருடை அணிந்து வழக்கறிஞர்கள் என்ற போர்வை யில் குண்டர்கள் சிலர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது காவல் துறையும், அகில இந்திய மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சிலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் ஆந்திரா, கர்நாடகாவில் தேவைக்கு அதிகமாக சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை இருப்பதாகவும், இவ்வளவு சட்டக் கல்லூரிகள் தேவையா என்பது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்  என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழக பார் கவுன்சிலில் இருந்த சட்டக் கல்வி உள்ப்ட  சில ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக  42 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், வழக்கறிஞர்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய உத்தரவிட்டதும் 4 ஆயிரம் கோப்புகள் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 20 சதவீதத்துக்கும் மேலாக போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. அதுகுறித்து பார்கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒருசில வழக்கறிஞர்களின் சான்றிதழ்கள் திடீரென மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

இதுகுறித்து குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் சிலருக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இவர்கள் அனைவரும் வரும்  15 நாட்களுக்குள் தங்களது சட்டக் கல்வி உள்ளிட்ட அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் பார் கவுன்சிலில் ஒப்படைக்க வேண்டும் என்றும்,  அவ்வாறு ஒப்படைக்கவில்லை எனில் பார் கவுன்சிலில் இருந்து அவர்களின் பதிவு நீக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பார் கவுன்சிலில் பணிபுரியும் 2 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இது வழக்கறிஞர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.