சென்னை: பதிவுத்துறையைச் சார்ந்து பணிபுரியும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்கள் நல நிதியம் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கான உறுப்பினர் அட்டையும் வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பதிவுத்துறையைச் சார்ந்து தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தர்கள் (ம) அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்து உறுப்பினர்களுக்கான அட்டைகளை வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில், வணிகவரி அமைச்சர் மூர்த்தி, தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.