இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.
படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை இந்த படத்தின் ரிலிஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் உரிமையுடன் இணைந்து தொலைக்காட்சி உரிமையையும் விஜய் டிவிக்கு கேட்டது ஹாட்ஸ்டார் நிறுவனம். ஆனால், தயாரிப்பு நிறுவனமோ தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு கொடுத்துவிட்டது.
கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் தள்ளிப்போனது.
இதனிடையே இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட படக்குழு முயன்றது. சில பிரச்சனைகளால் அந்த முடிவை கைவிட்ட படக்குழு, தற்போது டாக்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளது. வருகிற அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். ரசிகர்களுக்காகவும், திரையரங்க உரிமையாளர்களுக்காகவும் இத்தகைய முடிவை எடுத்ததாக இப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.