டெல்லி:
பணமதிப்பிழப்பு அறிவிப்பு சரியான முடிவு தான் என்று பிரதமர் மோடி மீண்டும் பேசியுள்ளார். ஆனால், தற்போது ஒரு டாக்டர் ரீதியில் அவர் பேசியிருப்பது தான் இதன் சிறப்பம்சம்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:
பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான போது நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருந்தது. ஒரு அறுவை சிகிச்சை எப்போது மேற்கொள்ளப்படும்? உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இது போல் பொருளாதாரம் வலுவான நிலையில் இருந்தபோது தான் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவரை போல் மோடி விளக்கம் அளித்தது சமூக வளைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. நல்லா இருக்குற உடம்புக்கு எதுக்கு அறுவை சிகிச்சை? என்ற ரீதியில் பல கேள்விகளும், நையாண்டிகளும் வைரலாகி வருகிறது.