டெல்லி: இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் இருப்பது பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் என தெரிய வந்துள்ளது. ஆனால், அம்மாநிலத்தின் கல்வி தரம், தமிழ்நாட்டை ஒப்பிடுவோமேயானால், 50 சதவிகிதம்தான் என்பதை மறுக்க முடியாது.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் இருப்பது அகில இந்திய உயா்கல்விக்கான கணக்கெடுப்பு (அய்ஷே) 2020-21) ஆய்வு அறிக்யை வெளியாகி உள்ளது. அதில், அதிக கல்லூரிகள் உள்ள மாநிலமாக உத்தரபிரதேசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு 5வது இடத்திலேயே உள்ளது.
இந்தியாவில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏழை மாணவர்களும் கல்வி கற்க அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்கிறார்கள். வடஇந்திய மாணவர்களும் தமிழ்நாட்டிலேயே உயர்கல்வி பெற விருப்பம் தெரிவிக்கிறார்கள். தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் gross enrolment ratio மிக அதிகம். தமிழ்நாட்டின் கடந்த கால ஆட்சியாளர்கள் இங்கு மாணவ, மாணவிகள் கல்வி கற்கக் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களே காரணம். குறிப்பாக, மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே அதிகப்படியான மருத்துவக் கல்லூரியைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இதனாலேயே பலரும் சென்னைக்கு மருத்துவ சுற்றுலா வருகிறார்கள். மருத்துவம் போன்ற உயர்கல்வி படிக்கவும் ஆசைப்படுகிறார்கள்.
இந்தி நிலையில், நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலை AISHE எனப்படும் அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு அமைப்பு அய்ஷே) 2020-21 ) வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பானது நாட்டிலுள்ள அனைத்து உயா்கல்வி நிறுவனங்களின் அமைவிடம், மாணவா் சோ்க்கை, பணிபுரியும் ஆசிரியா்கள் விவரம், உள்கட்டமைப்பு வசதிகள், நிதி தொடா்பான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைச் சேகரித்து வெளியுடம் வகையில் ‘அய்ஷே’ கணக்கெடுப்பை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் உயா்கல்வி நிறுவனங்களிடமிருந்து இணைய வழியில் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
இந்த பட்டியலில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அதிக பல்கலைக்கழகங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. மேலும், மத்திய அரசின் இந்தப் பட்டியலில் எந்த மாவட்டத்தில் அதிகபட்ச கல்லூரிகள் உள்ளன என்பது குறித்த தரவுகளும் இடம்பெற்றுள்ளன.
உத்தரபிரதேச மாநிலத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் இருப்பது அகில இந்திய உயா்கல்விக்கான கணக்கெடுப்புஅறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது.
மத்திய அரசின் இந்தப் பட்டியலில் 52 அரசுத் தனியார் பல்கலைக்கழகங்கள், 26 மாநில பப்ளிக் பல்கலைக்கழகங்கள், 7 டீம்டு (நிகர்நிலை) பல்கலைக்கழகங்களாக்க (deemed to be universities) உள்ளன. மேலும், ராஜஸ்தானில் மத்திய அரசின் ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்கள் 5 உள்ளன. இது தவிர மத்திய அரசு நடத்தும் ஒரு பல்கலைக்கழகமும் மாநில அரசு நடத்தும் ஒரு பல்கலைக்கழகமும் உள்ளது.
பல்கலைக்கழகங்களில் ராஜஸ்தான் முதலிடம்
ஒட்டுமொத்தமாக ராஜஸ்தானில் 92 பல்கலைக்கழகங்கள் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக, உ.வி. உள்ளது. இங்கு 84 பல்கலைக்கழகங்கள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தை விட ஒரு பல்கலைக்கழகம் குறைவாக 83 பல்கலைக்கழகங்கள் உடன் குஜராத் இதில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து 74 பல்கலைக்கழகங்கள் உடன் மத்திய பிரதேசமும் 72 பல்கலைக்கழகங்களுடன் கர்நாடகாவும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதைத் தொடர்ந்து 72 பல்கலைக்கழகங்களுடன் மகாராஷ்டிரா 6ஆவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவுக்குப் பின்னரே தமிழ்நாடு இந்தப் பட்டியலில் உள்ளது. மொத்தம் 59 தமிழ்நாடு ஏழாவது இடத்தில் உள்ளது. அடுத்து ஹரியானா (56 பல்கலைக்கழகங்கள்), மேற்கு வங்கம் (52 பல்கலைக்கழகங்கள்) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 45 பல்கலைக்கழகங்களுடன் 10ஆவது இடத்தில் ஆந்திரா உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இவை தவிர, நாட்டிலேயே குறைந்த பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலமா லடாக் (2) உள்ளது. சண்டிகர், கோவா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா மூன்று பல்கலைக்கழகங்களை மட்டுமே கொண்டுள்ளன.
கல்லூரிகளில் உ.பி. முதலிடம் – தமிழ்நாடு…?
நாட்டில் அதிக கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் உ.பி. முதலிடத்தில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 8114 கல்லூரிகள் உள்ளன. இருந்தால் நாட்டின் பெரிய மாநிலமான உ.பி.யி.ல மக்கள் தொகைக்கு ஏற்ப கல்விச்சாலைகள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது. அதாவது ஒரு லட்சம் பேருக்கு 32 கல்லூரிகள் மட்டுமே உள்ளன. என தெரிவித்து உள்ளது.
அதிக கல்லூரிகளுடன் 2வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அங்கு 4532 கல்லூரிகள் உள்ளது. அதாவது, ஒரு லட்சம் பேருக்கு 34 கல்லூரிகள் உள்ளன. மூன்றவாது இடத்தில் கர்நாடக மாநிலம் உள்ளது. அங்கு 4233 கல்லூரிகள் உள்ளன. அதாவது, ஒரு லட்சம் பேருக்கு 62 கல்லூரிகள் இருக்கிறது. 4வது இடத்தில், தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் 3694 கல்லூரிகள் உள்ளது. அதாவது ஒரு லட்சம் பேருக்கு 40 என வகையில் உள்ளது. தொடர்ந்து, மத்திய பிரதேசம், ஆந்திரம், குஜராத், தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு குறைந்தபட்சம் 29 அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் கல்லூரிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதேபோல மாவட்ட வாரியாக பார்க்கும் போது பெங்களூர் 1508 கல்லூரிகளுடன் டாப் இடத்தில் உள்ளன. ஜெய்ப்பூர், ஹைதராபாத், புனே ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகள் மட்டும் வழங்கப்படுவதும், 55.2 சதவீத கல்லூரிகள் முதுநிலை பட்டப் படிப்புகளையும், 2.9 சதவீதம் கல்லூரிகள் ஆராய்ச்சிப் (பிஹெச்.டி) படிப்புகள் வரையும் வழங்குகின்றன. 35.8 சதவீத கல்லூரிகளில் ஒரு படிப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. அவற்றில் 82.2 சதவீதம் கல்லூரிகள் தனியாரால் நிா்வகிக்கப்படுபவை. 30.9 சதவீத கல்லூரிகளில் பி.எட். (கல்வியியல் கல்வி) படிப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. பெரும்பாலான கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை வெகு குறைவாக இருப்பது இந்த கணக்கெடுப்பு மூலமாக தெரியவந்துள்ளது.
அதுபோல நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில், 23.6 சதவீத கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை 100-க்கும் குறைவாக உள்ளது. 48.5 சதவீத கல்லூரிகளில் 100 முதல் 500 வரையிலும், 65.1 சதவீத கல்லூரிகளில் 500-க்கும் குறைவான மாணவா் சோ்க்கையும் நடைபெறுகிறது. 4 சதவீத கல்லூரிகளில் மட்டுமே 3,000-க்கும் அதிகமான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ள 41,600 கல்லூரிகளில் 8,903 (21.4%) கல்லூரிகள் அரசு கல்லூரிகளாகும். அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரிகள் 5,658 (13.3%), அரசு உதவிபெறாத தனியாா் கல்லூரிகள் 27,039 (65%) ஆகும்.
முழு விவரங்களை காண கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன் செய்து பாருங்கள்