மடப்பயல் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

ரவுண்ட்ஸ்பாய்:

இப்போ சமூகவலைதளங்கள்ல “மடப்பயல்” அப்படிங்கிற வார்த்தை அதிகமாவே புழங்குது. சரி, மடப்பயல் அப்படின்னா என்ன அர்த்தம்?

கூகுள்ல போட்டுப்பார்த்தேன்.  tamilarivu.com  அப்படிங்கிற இணையதளத்துல இப்படி போட்டிருந்துச்சு..

“தமிழில் அனைத்திற்கும் அர்த்தம் உண்டு பிறறை கண்டித்து திட்டும் சொற்கள் கூட அர்த்தமுடையவையே. அதுபோன்ற சொற்களை உங்களைப் பார்த்துப் பிறர் கூறினால் அதன் அர்த்தம் புரிந்துக் கொண்டு விளக்கம் பெற உதவியாக சிலவற்றைப் பார்க்கலாம்.

மடச் சாம்பிராணி

முன்பெல்லாம் மடங்கள் மக்கள் தரும் பொருட்களைக் கொண்டே இயங்கி வந்தன( இப்போ மட்டும் என்ன என்கிறீர்களா?) உணவு தானியங்கள் பூசைப் பொருட்கள் எனப் பலவும் மக்களின் காணிக்கையாகவும் நன்கொடையாகவுமே மடங்களுக்கு வழங்கப்படும். இதன் வரிசையில் பூசைப் பொருளான சாம்பிராணியையும் மடங்களுக்கு தானமாக மக்கள் தருவது வழக்கம், இவற்றை ஒரு மரப்பெட்டியில் சேகரித்து வைப்பர். காலப்போக்கில் சாம்பிராணியின் அளவு அதிகரித்து பெட்டி நிறைந்து விடும். பொதுவாக சாம்பிராணியானது அதிக நாட்கள் இருந்தால் அதன் வீரியம் குறைந்து வாசனையற்று போய்விடும் வாசனையற்ற வெற்றுப் புகைதான் வறும். இவ்வாறு மடங்களில் அதிகப்படியாக சேரும் சாம்பிராணியானது நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்து மக்கிப்போவது இயல்பே.

இதனால் மடத்துச் சாம்பிராணிகள் வாசனையற்றது பயனற்றது என்பது பொதுவான கருத்து. இதைக் குறிப்பாக வைத்தே வீரியம் அற்று மந்தமாக செயல்படுவோரை இந்த மடத்து சாம்பிராணியோடு ஒப்பிட்டு “அடேய் மடச் சாம்பிராணியே!” என்று அன்போடு அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

மடப்பயல்

மடங்கள் மற்றொரு ஏசும் வார்த்தைக்கும் பிறப்பிடமாக உள்ளது. அது மடப்பயல் என்ற மதிப்பு மிக்க பட்டயப் பெயர் ஆகும்.

எந்த வேளையும் செய்யாமல் சும்மாவே ராஜா போல ஊர் சுற்றிக் கொண்டு பசித்தால் மடங்களுக்குச் சென்று வயிறு முட்ட தின்று விட்டு தின்ற உணவை செரிக்கக் கூட விடாத அளவு சும்மாவே இருக்கும் செம்மல்களுக்கு “இனி நீ மடப்பயல்  என அன்போடு அழைக்கப்படுவாய்” என அக்கால மக்கள் வைத்து சிறப்பித்த பெயரே இது. அதாவது மடத்திலேயே தின்றுக்கொண்டு மடத்திலேயே தூங்கிக்கொண்டு மடத்திலேயே…(விடுங்க!) இருந்துக்கொண்டு இருக்கும் வேலையற்ற வாலிபன் என்பதே இதன் விளக்கம்.” – படிச்சு முடிச்சோனதான் “அப்பாடா”னு நிம்மதி வந்துச்சு.

இப்போ நீங்களும் நிம்மதி ஆயிருப்பீங்களே.. அதுதான் நமக்குத் தேவை!

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Do you know what the meaning of 'Madapayal'?, மடப்பயல் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
-=-