கடந்த இரண்டு மாதங்களாக தினமும் கருணாநிதி என் கனவில் வருகிறார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் வைகோ.
கனவு என்றால் என்ன?
இதற்கான அறிவியல்பூர்வமான விளக்கம் இதுதான்.
“ தூங்கும் போது நாம் காணும் காட்சிகள், ஓசைகள், உணர்வுகள் மற்றும் வேறு பல நிகழ்வுகளை கனவு என்று அழைக்கின்றோம். சில வேளைகளில் எமது கனவுகளுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும், வேறு சில வேளைகளில் அர்த்தமே இல்லாத கனவுகளாக அமைந்து விடுகின்றது. சில வேளைகளில் ஏதும் பயங்கரமான கனவு காணும் போது எப்படியாவது அந்தக் கனவை விட்டு எழுந்து விடவேண்டும் என்று இருக்கும், அதுவே சில சமயம் நல்ல கனவு காணும் போது எழும்பவே கூடாது என்று இருக்கும். ஆனால் எப்போதாவது உங்கள் கனவுகளுக்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா? இல்லையா…?
பொதுவாக உலகத்தினர் கனவுகளில் அதிகமாக வருவது ஆறுவகை காட்சிகள்தான்.
இந்த 6 விதமான கனவுகளுக்கு உளவியல் (psychological) ரீதியாக என்ன அர்த்தம் என்பதை உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிவார்கள்.. கேளுங்கள்.
பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பது போல் கனவு:
இந்த வகையான கனவு உங்களில் பலர் அனுபவித்து இருப்பீர்கள். பள்ளியில், வேலை செய்யும் இடத்தில் அல்லது பொதுவான ஓர் இடத்தில் நிற்பது போல் கனவு காணும் போழுது திடீரென்று நீங்கள் முற்றிலும் நிர்வாணமாக நிற்கின்றீர்கள் என்பது தெரிய வந்து விடும். உளவியல் ரீதியாக இவ்வாறு கனவு காண்பதற்கு அர்த்தம் இது தான்: எமது மனதில் இருக்கும் ஏதோ ஒரு விடயத்தை நாம் மறைக்க விரும்புகின்றோம். அந்த விடயம் மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது என்பதும் தான் இந்தக் கனவின் அர்த்தம். இதுவே அந்தக் கனவில் நாம் நிர்வாணமாக இருந்தும் வேறு ஒருவரும் எம்மை அவதானிக்கவில்லை என்றால், நாம் மறைக்கும் விடயத்தை இன்னும் ஒருவருக்கும் தெரிந்துவிடவில்லை என்று அர்த்தம்.
விழுவது போல் கனவு:
நீங்கள் எங்கேயோ இருந்து முடிவே இல்லாமல் விழுந்து கொண்டே இருப்பது போல் கனவு காண்பீர்கள். இது பலரால் காணப்படும் ஓர் பொதுவான கனவாகும். உளவியல் ரீதியாக இந்தக் கனவுக்கு அர்த்தம் உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு முக்கியமான விடயம் உங்கள் கட்டுப்பாட்டை மீறி விட்டு, நீங்கள் பாதுகாப்பற்ற, பயந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்பது தான். மேலும் நீங்கள் ஏதாவது ஒரு விடயத்தில் (உதாரணத்திற்கு பரீட்சையில்) தோற்றுவிட்டீர்கள் என்றாலும் இப்படியான கனவு வரக்கூடும்.
யாரோ துரத்துவது போல் கனவு:
யாராவது உங்களை துரத்துவது போல் கனவு கண்டால் உங்களுக்கு இருக்கும் பிரச்சினை கண்டு ஓடிவிடுகின்றீர்கள் என்று உளவியல் அர்த்தம். நீங்கள் எந்தப் பிரச்சினையை பார்த்து ஓடி விடுகின்றீர்கள் என்பதைப் பொருத்து, யார் அல்லது எது உங்களைத் துரத்துகின்றது என்பது தெரியவரும்.
பரீட்சை செய்வது போல் கனவு:
இந்தக் கனவும் பலருக்கு வருகின்ற பொதுவான கனவாகும். உங்கள் கனவில் திடீரென்று ஓர் பரீட்சை செய்ய வேண்டும் என்பது நினைவுக்கு வந்துவிடும். எனவே, நீங்கள் அந்தப் பரீட்சை நடக்கும் மண்டபத்தை நாடி போகின்றீர்கள், ஆனால், அந்த மண்டபத்தை தேடித் தேடி பார்த்தாலும் உங்களால் அதை சென்றடையவே முடியாது. இந்தக் கனவு பல வடிவங்களில் வரக்கூடும். உளவியல் ரீதியாக நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் வாழ்க்கையில் சோதனை செய்யப் படுகின்றீர்கள் என்று அர்த்தம். அந்தப் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதற்கு தீர்வு தெரியாமல் அவதிப் படுகின்றீர்கள் என்று அர்த்தமாகும்.
நின்ற நிலையிலே ஓடுவது போல் கனவு:
உங்கள் கனவில் நீங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றீர்கள், இருந்தாலும் ஒரு அடி கூட முன்னே போகவில்லை. இதற்கு அர்த்தம் வேறு ஒன்றும் இல்லை: உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினை கள் இருக்கின்றன. அவை ஒன்றுமே தீர்ந்து போகவில்லை. அப்படி தீர்ந்தாலும் அடுத்த பிரச்சினை உங்களைத் தேடி வந்து விடுகிறது. ஒரே நேரத்தில் பல விடயங்களைச் செய்ய முயற்சிக்கும் நீங்கள் அது முடியாமல் அவதிப் படுகின்றீர்கள்.
பறப்பது போல் கனவு:
சிலர் பறப்பது போல் கனவு காண்பார்கள். உளவியல் ரீதியாக உங்களுக்கு முக்கியம் எனப்படு கின்ற அனைத்து விடயங்களும் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது என்பது தான் அர்த்தம். உங்கள் தன்னம்பிக்கை மிகவும் பலமாக இருக்கிறது. உங்களால் எது என்றாலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றீர்கள். அதே கனவில் உங்களுக்குப் பறப்பது கடினமாக இருந்தால், யாரோ ஒருவர் அல்லது ஏதோவொன்று உங்களுக்கு தடங்கலாக இருக்கின்றது என்று தான் அர்த்தம். அப்படி பறக்கும் போது உங்களுக்கு பயமாக இருக்கின்றது என்றால் உங்கள் வாழ்க்கை யில் ஏதோ ஓர் பிடிக்காத சவால் இருக்கின்றது என்பது தான் அர்த்தம்.
கனவுகளில் இந்த 6 வகைகளும் தான் இருக்கின்றன என்று இல்லை. இன்னும் எத்தனையோ வகையான கனவுகள் இருக்கின்றன. ஆனால், இந்த 6 வகைகளும் தான் பொதுவாகப் பலரால் காணப்படும் கனவுகள் ஆகும். எல்லாக் கனவுக்கும் அர்த்தம் இருக்கின்றது என்றும் எண்ண முடியாது, ஆனால் பல விதமான கனவுகளுக்கு அர்த்தங்கள் இருக்கலாம் என்பதை ஆராய்ச்சி யாளர்கள் கூறியிருக்கின்றார்கள்.