டில்லி:

பாலியல் கொடுமைகளில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் தொடர்பான  விசாரணைகள் மிகவும் தாமதமாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

ஆனால், இந்த தாமதத்திற்கு காரணம், பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து எடுக்கப்படும் ஆதாரங்கள் அடிப்படையிலான ஆய்வக முடிவுகள்தான்  என்பது தெரிய வந்தது. ஆய்வகங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுகளை தராமல் இழுத்தடிப்பதால், ஏராளமான  வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டம், 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி, இதில் குற்றவாளிகளுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்க வகை செய்தும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 60 நாள் காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. 10 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.  விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடைமுறைகள் ஏதும் கடைபிடிக்கப்படுவது இல்லை.

சமீபத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, பாலியல் வன்கொடுமை  குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண் டும். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், ‘போக்சோ’ பிரத்யேக நீதிமன்றங்கள் , 60 நாட்களுக் குள் அமைக்க வேண்டும். வழக்குகளில் ஆஜராவதற்கு, சிறப்பு பயிற்சி பெற்ற வக்கீல்களை நியமிக்க வேண்டும். இத்தகைய வழக்குகளில், தடயவியல் அறிக்கைகளை, குறிப்பிட்ட காலத்துக் குள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கு தாமதமாவதற்கு, ஆய்வக முடிவுகள்தான் காரணம் என்று காவல்துறை

இதுகுறித்து கூறிய ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திற்கு எதிரான குற்றங்கள்’ (Crimes against Women and Child Welfare) பிரிவு துணைஆணையர் எச்.ஜெயலட்சுமி, போக்சோ வழக்கில் சம்பந்தப் பட்டவர்கள் மீதான வழக்கை நாங்கள் விரைவாகவே விசாரித்து வருகிறோம், ஆனால்,   எங்களுக்கு அறிக்கைகள் கிடைக்காவிட்டால், நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது”, அறிக்கைகள் கிடைக்க மிகவும் தாமதமாகிறது. மேலும், ஆய்வகத்தில், சில வழக்குகளுக்கு  முன்னுரிமை அடிப்படையில் ஆய்வுகள் நடைபெறு கிறது என்று கூறியவர், மதுரை மற்றும் சென்னையில் மட்டுமே இதுதொடர்பான ஆய்வகங்கள் உள்ளன. இந்த இரண்டு ஆய்வகங்களும் குறைவான பணியாளர்களாக இருப்பதால், முடிவுகள் தாமதமாகி வருகிறது.  மேலும் சிறுவர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க  நேரம் தேவைப்படுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ‘அரசு தடயவியல் ஆய்வகங்களில் போதுமான அளவில் பணியாளர்கள் இல்லாத தால், ஆய்வு முடிவுகள் கிடைக்க தாமதம் ஏற்படுவதாக தடயவியல்துறையினர் கூறி உள்ளனர்.

கொலை, போதைப்பொருள், விழிப்புணர்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு வழக்குகளையும் தட யவியல் ஆய்வாளர்கள் கையாள வேண்டியதிருப்பதாலும், பணியாளர்கள் பற்றாக்குறை காணமாகவும், முடிவுகள் அறிவிக்க தாமதம் ஆகிறது என்றும் அவர்கள் காரணம் கூறுகின்ற னர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சிறப்பு அரசு வழக்கறிஞரும் மூத்த ஆலோசகரும், என்று மனித உரிமை வழக்குகளுக்கான  வி. கண்ணதாசன் ,  போக்சோ வழக்கில்  “ஆய்வக அறிக்கைகள் இல்லாமல் வழக்குகள் தொடர முடியாது’. இதன் காரணமாக வழக்கு தாமதமாகி றது. இதைக் காரணமாக கூறி, குற்றம் சாட்டப்பட்ட பலர் ஜாமீனில் வெளி வருகிறார்கள், தேவையான ஊழியர்களை நியமித்து, விரைந்து வழக்குகளை முடிவுக்கு  கொண்டு வர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

உச்சநீதி மன்றம் போக்சோ வழக்கை தனி நீதிமன்றம் அமைத்து விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால், காவல்துறையினரோ தங்களுக்கு ஆய்வக முடிவுகள் கிடைக்க தாமதமாகிறது என்று கூறுகின்றனர், ஆய்வக அதிகாரிகளோ, தங்களுக்கு போதிய பணியாளர்கள் இல்லை என்று தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தால், இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் எப்போதுதான் தீர்வு கிடைக்கும்?

கடந்த 2013ம் ஆண்டு முதல் சென்னையில்  பதிவு செய்யப்பட்ட 250 சிறுவர் பாலியல் வன்கொடுமை வழக்குகளில், மருத்துவ அறிக்கைகள் தாக்கல் செய்வதில் தாமதம் காரணமாக சுமார் 120 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாநிலத்தில் அரசு நிர்வாகத்தில் இவ்வளவு ஓட்டைகள் இருந்தால் எந்தப்பணியும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு பெறாது என்பது. அரசு அதிகாரிகள்  இதுபோன்ற வெட்டிக்காரணங்கள் கூறுவதை தவிர்த்து, அரசுக்கு தேவையான பணியாளர்களை நியமிக்க கோரி வலியுறுத்த வேண்டும், அதுபோல, நீதிமன்றமும், இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழகஅரசின் தலையில் ‘குட்டு’ வைக்க வேண்டும் என்று   சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.