Madhan  அவர்களின் முகநூல் பதிவு:
 13880141_1955802621312894_5275926789148617770_n
வெளியூர்க்காரங்க கேக்குறதுக்கு பனியன் கம்பெனின்னு  கெத்தா இருக்கும் ஆனா இதுவும் கூலி வேலை தான்.
வீட்டு வாடகை ஜாஸ்தி தண்ணீர் பிரச்சனை.   அதுவும் வட மாநிலத்தவர்கள் வருகை அதிகமானதிலிருந்து நகர்பகுதிகளில்  வாடகைக்கு காலி வீடே இல்லை.
குடிநீர் குழாய்கூட பதிக்காத புறநகர் பகுதியில் தான் குடியேற வேண்டும்.
இதையெல்லாம் சமாளித்தாலும் வேலை தான் வினையே.  கிராமத்தில் வெயிலில் வேலை செய்வது சிரமம் என்று
இங்கே விஷத்திற்கு நடுவே வேலை செய்கிறார்கள்.  பனியன் துணியிலிருந்து வெளிவரும் தூசு சிகரெட்டைவிட மோசமானது.
ஒரு கம்பெனி ஜன்னலுக்கு அருகில் உள்ள தியேட்டருக்கு  சென்றுவிட்டு வந்து பார்த்தால் வண்டியையே
தூசு மூடிவிட்டது.அப்போ உள்ளே நாள் முழுவதும்  இருப்பவர்கள் நிலைமை.?
20 வருடங்கள் பனியன் கம்பெனிகளில் வேலை  செய்பவர்களை ஆராய்ந்து பார்த்தால் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிவரும்.
அதுவும் வீட்டிற்கு ஒருவர் வேலைக்கு போனால்  வாங்குற சம்பளம் சோத்துக்கே பத்தாது. எங்க சொத்து சேக்குறது.வீட்டிற்கு மூன்று  பேராவது வேலைக்கு செல்ல வேண்டும்.
வயதுக்கு வந்த டீனேஜ் பெண்ணாக இருந்தால்  வேலைக்கு அனுப்பினாலும் வீட்டில் வைத்தாலும் உங்கள் பெண்ணின் திருமணம் உங்கள்  விருப்பப்படி நடக்காது.
உடல் வலி என்று ஆரம்பித்து ஆண்கள்  படிப்படியாக குடிகாரனாகிவிடுவார்கள்.
படிக்காமல் டெய்லர் வேலை செய்வோருக்கு  கடைசி வரை அதே 400 ரூபாய் தான் வருமானம்.
அதற்கு உங்கள் ஊரில் 200 ரூபாய் கிடைத்தாலும் அங்கு செலவும் பாதிதான் இருக்கும்.
சிக்கனமாக இருந்தால் சொந்த ஊரிலேயே வேலை செய்து ஊரோட கெத்தா வாழலாம்.
தீபாவளி பொங்கலுக்கு மட்டும் வாழாமல்.