ரண்டாவது கட்டமாக நடிகர் ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்திக்கும் ரஜினி,  அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இன்று (டிசம்பர் 31) தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை 8.58 மணிக்கு மேடையேறினார்.

அப்போது அவர் தனிக்கட்சி துவங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

அவரது அறிவிப்பை உற்சாகமாக கைதட்டி ரசிகர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து பேசிய ரஜினி, “சாதி மத வேறுபாடு இல்லாத ஆன்மிக அரசியல் கொண்டுவருவேன்” என்று ரஜினி பேசினார்.

(இது குறித்து தனியாக செய்தி வெளியிட்டுள்ளோம்.)

மேலும் ரஜினி பேசும்போது, “அந்தக் காலத்தில் மன்னர்கள் அடுத்த நாட்டை போரிட்டு வென்று கொள்ளையடிப்பார்கள். இங்கோ ஜனநாயகம் என்ற பெயரில் சொந்த நாட்டு மக்களையே கொள்ளையடிக்கிறார்கள்.

இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும். இதற்கு தொண்டர்கள் வேண்டாம் காவலர்கள் வேண்டும். நம் மன்றத்தினர் காவலராக இருந்து தவறுகளைத் தட்டிக்கேட்க வேண்டும்.

உங்களை சுற்றி உள்ள தாய்மார்கள், இளைஞர்கள் அனைவரையும் மன்றத்துக்கு கொண்டு வர வேண்டும். பதிவு செய்யாத மன்றங்களை பதிவு செய்து ஒழுங்குபடுத்த வேண்டும்.

இதையெல்லாம் முடிக்கும் வரை நமக்கு அரசியல் வேண்டாம். அரசியல் குறித்து மன்றத்தினர் யாரும் விமர்சனம் வேண்டாம். நானும் செய்ய மாட்டேன்” என்று ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.