சென்னை: தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்க கூடாது என்று உத்தரவிட்ட செனனை உயர்நீதிமன்றம். அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட தமிழகஅரசின் அரசாணை அமல்படுத்தப்படவில்லை என்பதால், அந்த அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும், அது செல்லாது என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடத்தப்படாமலேயே தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அதுபோல, பொறியியர், ஆர்ட்ஸ் கல்லூரி அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்ற 2020ம் ஆண்டு எடப்பாடி தலைமையிலான அதிமுகஅரசு அறிவிப்பு வெளியிட்டது. பின்னர், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அரியர் தேர்ச்சிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்னர்.
இந்த வழக்கின் விசாரணை பல கட்ட விசாரணைகளை தொடர்ந்து, இன்று மீண்டும் நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரியர் தேர்வு மாணவர்களுக்கு இரு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்ட தாகவும், அரியர் தேர்வுகளை ரத்து செய்த அரசாணையை அமல்படுத்தவில்லை என்றும் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அதுபோல, இறுதி பருவத் தேர்வுகளையும், இடைப்பட்ட பருவத் தேர்வுகளையும் நடத்த வண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை வகுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர். மேலும், தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.