சென்னை:

“தனது பதவியும் – அரசும் நிலைத்தால் போதுமென்று காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க பாஜக அரசுக்கு முதலமைச்சர் சாமரம் வீச வேண்டாம்”  என்று  தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்  துரைமுருகன்  காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது, ஒரு நிர்வாக நடைமுறை தொடர்பான நடவடிக்கை” என்றும், “விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது” என்றும் பூசி மெழுகி, பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும்போது, நெஞ்சில் ஆயிரம் யானைகள் மிதிப்பதைப் போன்று ஒரு அழுத்தம்.

பல ஆண்டுகாலமாக பல்வேறு வழக்குகள் மற்றும் பல்வேறு தடைகளைக் கடந்து, கிடைக்கவே கிடைக்காது என்று நம்முடைய எதிரிகள் சொல்லிக் கொண்டிருந்தபோது, படாதபாடுபட்டு காவிரி வழக்கில் இறுதி வெற்றி பெற்று, ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ அமைப்பதற்கு வழிவகுத்தவர், தலைவர் கலைஞர் அவர்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள்தான் – காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று முதன்முதலில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் ; காவிரிப் பிரச்சினை குறித்து கர்நாடகத்தோடு முதன்முதலில் பேச்சுவார்த்தை துவக்கியவர்; பிரச்சினை தீர்க்கப்படாமல் ஆண்டுகள் பல கடந்தபோது, ஒரு இறுதித் தீர்வு காண இந்தப் பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு முதன்முதலாக எடுத்துச் சென்றவர்; “காவிரியின் மொத்த நீர் வரத்து எவ்வளவு என்று தெரிந்தால்தானே பங்கீடு செய்ய முடியும்” என்று மத்திய அரசு சொன்னவுடன்,

மோடி அரசின் குள்ளநரித்தனம்: காவிரி மேலாண்மை வாரியம் முடக்கம்…

“உண்மை கண்டறியும் குழு” (fact finding committee) ஒன்றை அமைத்து காவிரியின் மொத்த நீர்வரத்தின் அளவைக் கண்டுபிடித்துக் கொடுத்தது; வி.பி. சிங் பிரதமராக இருந்த காலத்தில் காவிரிக்கு நடுவர் மன்றத்தைப் பெற்றத் தந்தது; இந்தக் காவிரி நடுவர் மன்றத்தில், இடைக்காலத் தீர்ப்பு வேண்டும் என்று கோரியது; ‘இடைக்காலத் தீர்ப்பு அளிக்க நடுவர் மன்றத்திற்கு அதிகாரம் இல்லை’ என்று நடுவர் மன்றம் சொன்னபோது, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குப் போய், ‘காவிரி நடுவர் மன்றத்திற்கு இடைக்காலத் தீர்ப்பு வழங்க உரிமை உண்டு’ என்ற உத்தரவைப் பெற்றுத் தந்தது;

இடைக்காலத் தீர்ப்பாக 205 டி எம்.சி.யைப் பெற்றுத்தந்தது; இறுதியில், காவிரிப் பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தில் இறுதித் தீர்ப்பு பெற்றத் தந்தது என, காவிரிப் பிரச்சினைக்கு நுனி முதல் அடி வரையில் போராடியவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்!

அவர் இன்றைக்கு இருந்திருந்தால், காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கொண்டுபோய் மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்ட நிலையைக் கண்டு எவ்வளவு கொதித்திருப்பார் என்பதை நான் எண்ணிப்பார்க்கிறேன்.

இந்த நீண்ட போராட்டத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணித்துறைக்கு அமைச்சராக இருந்தவன் – இந்த முக்கிய முடிவுகளில் எல்லாம் உடன் இருந்தவன் என்ற அடிப்படையில், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள பொறுப்பற்ற இந்த அறிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எழுப்பியுள்ள மிக முக்கியமான பிரச்சினைக்கு, துறை அமைச்சரான முதலமைச்சர் பதில் சொல்லாமல், துறைச் செயலாளரை விட்டு, அரைகுறையாக ஒரு அறிக்கை விட வைத்திருப்பது, முதலமைச்சர், “ரேபிட் டெஸ்ட் கிட்” விவகாரத்தில் பதற்றத்துடன் இருக்கிறார் என்பதையே காட்டுவதாக அமைந்திருக்கிறது.

ஆளும் அ.தி.மு.க.,வினர்தான் இப்படி என்றால், சில தமிழ்ப் பத்திரிகைகள் கூட இந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்திருப்பதைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன் – வேதனைப்படுகிறேன்.

பாவம், அவர்களும் மத்திய – மாநில அரசுகளுக்கு அடகு போய்விட்டார்கள் போலும்!

ஆனாலும்,”இந்து” பத்திரிகையும், “டைம்ஸ் ஆஃப் இந்தியா” பத்திரிகையும் – அ.தி.மு.க. அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்ட அடாத செயலைக் கண்டு கொதித்து, இந்தச் செய்திக்கு உயிர் கொடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் பத்திரிகைகளுக்கு ஒரு பாராட்டு!

எங்கள் கழகத் தலைவரும், நானும், “காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரமும் இல்லை. விவசாயிகளின் நலன்களைக் காக்கும் அவசர உத்தரவுகளைப் பிறப்பித்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் தன்னாட்சியும் இல்லை” என்று எவ்வளவோ வாதாடினோம், போராடினோம். ஆனால், “காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடாது” என்று, இப்போது பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் கூறுவது போல், இத்துறையின் அமைச்சரான முதலமைச்சர் அப்போது பொய்வாதம் செய்து, “இல்லை… இல்லை… ஆணையத்திற்கு அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது” என்றார்.

ஆணையம் அமைக்கப்பட்ட ஜூன் 2018-லிருந்து இன்றுவரை, உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் கீழ் அரசிதழில் வெளியிடப்பட்ட, “காவிரி நீர் மேலாண்மைத் திட்டம்-2018”ல் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு உத்தரவினை, தமிழகத்திற்கோ அல்லது தமிழக விவசாயிகளுக்கோ, ஏன், சட்டப்படி நியாயமாக ஒரு உத்தரவினை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை பிறப்பித்திருக்கிறதா? இல்லை! அவ்வளவுதான் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட (!) அதிகாரம்.

“கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் சேர்த்துதான் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று, பொதுப்பணித்துறைச் செயலாளர் கூறியிருக்கிறார். பாவம். அவர், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த காவிரி இறுதித் தீரப்பைக் கூட படித்துப் பார்க்கவில்லை போலும்.

மத்திய அரசின் வழக்கறிஞர், “கோதாவரி, கிருஷ்ணா நதிநீர் பிரச்சினையில், நடுவர் மன்ற உத்தரவுகளை நிறைவேற்றத் திட்டம் (Scheme) ஏதும் தயாரிக்கப்படவில்லை. காவிரி நதிநீர் நடுவர் மன்றத் தீர்ப்பில் மட்டுமே இப்படியொரு ஸ்கீம் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று வாதாடி, மேற்கண்ட 16.2.2018 தீர்ப்பிலேயே, அது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே கோதாவரி, கிருஷ்ணா வாரியங்கள் வேறு; காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம…

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.