இந்திய ஆயுஷ் அமைச்சரகம் பெயரில் வெளியாகும் வதந்திகளை வதந்திகளை நம்பவேண்டாம் என்று மருத்துவர்  சஃபி தெரிவித்து உள்ளார்.

Dr.Safi Nagercoil

Arsenicum Album 3 C தினமும் காலை வெறும் வயிற்றில் 3 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் ,

இதையே ஒரு மாதம் எடுத்துக்கொண்டால் இன்ஃப்லுயென்ஸா எனும் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கப்படும் !

இப்படி ஒரு அறிக்கை !!

வெளியிட்டது இந்திய #ஆயுஷ் அமைச்சரகம் !

நேற்று முதல் வாட்சப் முழுதும் சுற்றும் ஒரு புகைப்படம் இதுதான்

அதிலும் அழகாக எடிட்டிங் செய்து தமிழில் வேறு வந்துள்ளது !!

நம்மூர் விஞ்ஞான கூட்டமும் வழக்கம் போல சிங்கம் சூர்யாவை விஜயகுமார் வரவேற்பது போல ,

” இத்தனை நாள் எங்கயா இருந்த  உன்னை தான் யா தேடிட்டு இருந்தேன் ”
என ஒரே கோலாகலம் ,

சரி

நாமும் இதை பற்றி மருத்துவ உண்மைகளை தேடுவோமே என்று ஆரம்பித்த
தேடலின் படையல் தான் இந்த கட்டுரை !

ஆர்செனிகம் ஆல்பம் , முதல்ல ஆர்செனிக் பற்றி பார்க்கலாம் ,

வேதியியல் பாடத்தில் 33 ம் எண் அடாமிக் நம்பர் கொண்ட அதே தாது பொருள் தான் இந்த ஆர்சனிக் ,

இவ்வகை ஆர்சனிக்  நீர் ,காற்று, நிலம் ,மண் என பல இடத்தில் பரவி கிடக்கும் ஓர் தாதுபொருள் ஆகும் , இதன் வழியாக தான் நாம் உண்ணும் ஒருசில தாவரங்கள் , கீரைகள் , மீன் வகைகள் , பழங்கள் போன்றவற்றில் ஆர்சனிக் இருப்பதாக சொல்கின்றனர் ,

அதிலும் சிலருக்கு இது உடலில் அதிகமாகி பலவகையான நோய்களும் ஆர்செனிக் நச்சுத்தன்மையால் வர வாய்ப்புண்டு எனவும் சொல்கிறது உலக சுகாதார மையம் ,

அதே சமயம், நவீன விஞ்ஞான மருத்துவத்தில் கூட இந்த ஆர்சனிக் எனும் தாதுவை மருத்துவ அளவீட்டுகள்படி ஒரு சில கேன்சர்களுக்கான கீமோதெரபியாக பயன்படுத்தப்படுகிறது ,

நமக்கே தெரியும் கீமோதெரபி என்பது பலருக்கும் கடைசி சந்தர்ப்பமாக முடிந்தவரை அந்த மனிதனின் வாழ் நாளை புற்று நோயின் கோரப்பிடியில்.இருந்து சற்றே நீட்சியடைந்திட செய்யும் ஓர் முயற்சி ,

சரி

ஹோமியோ மேட்டருக்கு வரலாம் , முதலில் , ஒரு டிஸ்க்கி ( DISCLAIMER)

மாற்று மருத்துவங்களை பற்றியோ , அவர்களுடைய மருத்துவ முறைகளை பற்றியோ குறைகளை கூறி ஏளனம் செய்யும் வழக்கமோ , பழக்கமோ உடையவன் அல்ல என்னுடைய பல நண்பர்கள் ஹோமியோ மருத்துவர்கள் ஆனால், சில மருத்துவ போலி பிரச்சாரங்கள்  மற்றும் பொய் புரளிகள் வரும்போது , அதனை பாமரனுக்கு தெளிவுபடுத்திடும் ஒரு கருவியாக நான் நிச்சயமாக இருப்பேன் !

அப்படி நடந்த தேடல் தான் இதுவும்

முதலில் ஹோமியொ பற்றிய பொதுவான மருத்துவ கொள்கைகளை புரிந்துகொள்ளலாம் ,

1796 ஜெர்மனியை சேர்ந்த சாமுவேல் ஹானேமன் எனும் ஒருவர் ” அந்தந்த அறிகுறிகளுக்கு ( நோய்களுக்கு அல்ல ) அந்தந்த காரணங்களே தீர்வு ” எனும் ஒரு அனுமானத்தை வகுத்தார் ,

அதன்படி உருவானது தான் மெட்டீரியா மெடிக்கா எனும் ஹோமியோ மருத்துவத்தின் பைபிள் எனப்படும் ஒரு புத்தகம் ,

மேலும் இதனால் பலருக்கும் பெரிய பலன்கள் இல்லை எனவும் , பல பிரச்சனைகளுக்கு காரணமாக இவ்வகை மருத்துவம் அமையலாம் என

ஆஸ்திரேலிய
ஸ்பெயின்
சுவிஸர்லாந்து
பிரான்ஸ்
ரஷ்யா போன்ற மாகாணங்கள் இவ்வகை மருத்துவத்தை PSEUDOSCIENCE அதாவது போலி மருத்துவம் என அறிவித்து தம் நாட்டில் தடை செய்துள்ளது என்பதும் செய்தி

European Academy Science Advisory council and Commission of Pseudo sciences and research fraud of Russian academy of science கூட ஹோமியோ ஒரு உபயோகமற்ற மருத்துவமுறையும் , இதனால் பெருமளவிற்கு பலருக்கும் பாதிப்பு வரலாம் எனவும் சொல்கிறது ..

மேற்கூறிய அனைத்தும் நான் மொழியவில்லை ,

இதோ பிரிண்ட் ( THE  PRINT )எனும் சர்வதேச நாளிதழுடைய இன்றைய செய்தி இதோ,

https://theprint.in/health/modi-govt-advises-homoeopathy-unani-to-prevent-coronavirus-that-has-no-known-cure-yet/355951/

சரி

ஹோமியோ நன்மையான மருத்துவம்.என்றே ஒப்புக்கொள்கிறேன். கொரனா விஷயத்தில் நம் ஆயுஷ் பரிந்துரைக்கும் மருந்தான. ஆர்செனிக்கா ஆல்பம் இதைபற்றிய என்னுடைய தேடலில் நான் அறிந்தது
அது

வயிறு எரிச்சல்,
அஜீரணம்,
வாந்தி,
பேதி ,
உணவு ஒவ்வாமை போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு அதுவும்

தற்காலிக துயர்நீக்கி ( TEMPORARY_RELIEF) என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது ,

அதே நேரத்தில் இதன் டோஸ் எனும் அளவீடு முறையாக கொடுக்கப்படா

விட்டால் ஆர்செனிக்  நச்சுத்தன்மைக்கும் ( Arsenic_Poisoning) வர வாய்ப்புள்ளதாக ஹோமியோ மருத்துவமுறையே எச்சரிக்கை விடுக்கிறது ,

நம்மூரில் மக்களுக்கு குழந்தைகளுக்கு தரும் சிரப் எனும் டானிக்குகள் கூட ஒழுங்காக கொடுக்க தெரிவதில்லை ,

ஆர்செனிக் நச்சுத்தன்மை வந்தால் என்னென்னெ ஆகும் என சொன்னால் இந்த கட்டுரை இன்று முடியாது ,

இதோ வைக்கி விலாவரியா எழுதி இருக்கான் பார்த்துக்கொள்ளவும்

https://en.wikipedia.org/wiki/Arsenicum_album

சரி , எந்த இடத்திலும் இது வைரஸ் கிருமியை கொல்லும் , வைரஸ் வராமல் தடுக்கும் , வைரஸ் உருவாக்கத்தினை முடக்கும் , வைரஸ் பல்கி பெருகுவதை குறைக்கும் , என தெரியாத போது , ஒரு பேதி மருந்தை எந்த தைரியத்தில் இதனை ஓர் தடுப்பு மருந்தாகவும் அறிவித்தது நம் அமைச்சகம் என்பதை கூட ஒரு கேள்வியாக எழுப்புகிறது நம் பிரிண்ட் பத்திரிகை ?

சர்வதேச மருத்துவ அமைப்புகளான

WHO
CDC
UNICEF அல்லது இன்ன பிற மருத்துவ சங்க பிரிவுகள்  போன்ற எந்த வித அங்கீகாரமும் பெறப்படாமல் இப்படி ஒரு மருந்தை உட்கொண்டால் மனித இனத்தை  கொல்லும் கொரனா வராமல் இருக்கும் என சொல்வதன் அறிவியல் உண்மையிலேயே பயமுறுத்துகிறது !!

கூடவே

யுனானி வேற ஷாதங் பானியா , ஷம்ஷமானி , அகஸ்ட்யா ஹரிட்யாகி

அய்யய்யோ ..!!!

அதைப்பற்றி நான் பேச ஒன்றுமே இல்லை , இதற்கான சான்றுகள் கூட எதுவுமே இல்ல ..! எல்லாம் கைமருந்து மேட்டரா இருக்கு !!

நம் நாட்டு #உச்சநீதிமன்றம் கூட தடை விதித்த ஓர் மருத்துவ முறையை பற்றி நான் ஒன்றுமே சொல்வதற்கு இல்லை

ஆளை விடுங்கள் ,மொத்தத்தில்  கொரனா பற்றிய உண்மைகளை அறிவோம் ,
அறிவியல் ஆதாரங்கள் இல்லாத செய்திகளை புறக்கணிப்போம் ,

நோயை விட நோயை பற்றிய அறியாமை ஆபத்து !

நோய் அறியாமையை விட நோய் மருத்துவங்கள் பற்றிய பொய் , புரளி பரப்புரை பேராபத்து !!!

WHO எனும் உலக சுகாதார மையமோ , CDC எனும் நோய் தடுக்கும் சர்வதேச அமைப்போ அங்கீகரிக்காத , அனுமதி அளிக்காத எந்த வகையான மருத்துவமும் , தடுப்பு மருந்தும் நமக்கு நன்மையானதாக இருக்காது !!

தலையில் அணியும் ஹெல்மட்டிற்கு கூட, ISI முத்திரை பார்க்கும் நாம் நோய்க்காக வாயிற்குள் தள்ளும் மருந்தினுடைய அங்கீகாரங்களை பற்றி கவலை கொள்ளாதது எத்தனை பெரிய மூடத்தனம் !!

நோய் அறிவோம் !
முறையான மருத்துவம் புரிவோம் ,

வாழ்க நலமுடன்

பிகு .

இதைபற்றிய நான் அறியாத நுண்தகவல்கள் ஏதேனும் இருக்குமானால் , எனக்கு தெரிவிக்கலாம் , அறிவியல் தேடலான ஆவலோடு இருக்கிறேன் ,

நன்றி !!

செல்வமுரளி

 

[youtube-feed feed=1]