ஈரோடு: “234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட மற்ற எந்தவொரு கட்சிகளுக்காவது துணிவு இருக்கிறதா?” என ஈரோடு கிழக்கு தொகுதி யில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு சீமான் கேள்வி எழுப்பினார்.

இவிகேஎஸ் மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், பிப்ரவரி மாதம் 5ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, ஏற்கனவே வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு, தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்துள்ளன. அதனால், அங்கு திமுகவுக்கும் , நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜனவரி 23ந்தேதி முதல் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய இயலாத, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஓட்டுக்களை தபாலில் செலுத்தலாம். வீடுகளுக்கே வாக்கு பதிவு அதிகாரிகள் வந்து வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அங்கு கடுமையான பிரசாரம் நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிக்காக தமிழ்நாடு அமைச்சர்கள் உள்பட பல தரப்பினர் அங்கு முகாமிட்டு தேர்தல் களப்பணியாற்றி வருகின்றனர். அதுபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட மற்ற கட்சிகளுக்கு துணிவு இருக்கிறதா? அந்த துணிவு நாம் தமிழருக்கு இருக்கிறது.
இந்த மண்ணை நிச்சயமாக வெல்வோம், கோட்டையை திறக்க ஒரே சாவி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உதிக்கட்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து புதிய விடியல் உருவானதாக வரலாறு எழுதுங்கள்” என்று கூறினார்.