ஜூன் மாதம் 21 ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தார்.
மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு துவங்கி 10 நாட்கள் ஆன நிலையில், தடுப்பூசி போடும் பணி திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என்பது குறித்து லைவ் மின்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.
தற்போதுள்ள சூழ்நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட 10 மாநிலங்களில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட மூன்று முதல் 6 மாத காலம் ஆகும் என்று தெரிவித்துள்ளது.
இந்த மாநிலங்களில் உள்ளவர்களுக்கு முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுமுடிக்க 6 மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாநிலங்களில் ஜூன் முதல் இரண்டு வாரங்களை ஒப்பிடுகையில் கடந்த பத்து நாட்களாக தடுப்பூசி போடும் பணி மந்தகதியில் நடந்து வருவதாக கூறியுள்ளது.