சென்னை

பெண் ஒருவரிடம் விற்கப்பட்ட குழந்தை யாருடையது என்பதைக் கண்டறிய மரபணு சோதனை நடந்து வருகிறது.

சென்னையில் கடந்த ஆண்டு பத்மினி என்னும் பெண் ஒரு குழந்தையை வளர்த்து வந்துள்ளார்.   அந்தக் குழந்தை அவருடையது அல்ல என பிறகு தெரிய வந்துள்ளது.   அந்த குழந்தையை பத்மினி ஒரு கடத்தல் கும்பலிடம் இருந்து விலைக்கு வாங்கி வளர்த்டு வருவது கண்டறியப்பட்டது.  அதை ஒட்டி அந்தக் குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டு வருகிறது

உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தானே தலையிட்டு விசாரணை நடத்தியது.  அதை ஒட்டி குழந்தையை பத்மினிக்கு விற்றதாக கூறப்பட்ட நிக்கி  வர்மா, கோபல் வர்மா, ஜெய் சர்மா, மற்றும் அஜய் சர்மா ஆகியோர் கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.  அவர்களை கைது செய்த குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் அந்த குழந்தை தங்களில் ஒருவருடையது எனக் கூறி உ ள்ளனர்.

இதை ஒட்டி அந்தக் குழந்தை யாருடைய குழந்தை எனக் கண்டறிய காவல்துறை முடிவு செய்தது.  அதை ஒட்டி அரசு காப்பகத்தில் உள்ள அந்தக் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   தற்போது மருத்துவ மனையில் அந்தக் குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க மரபணு சோதனை நடந்து வருகிறது