
சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, நேற்று அதிமுக சார்பில் உண்ணாவிரதம் இருந்த நிலையில், இன்று திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை சேப்பாக்கதில் திமுக உண்ணாவிரதப் போராட்டம் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தலைமையில் தொடங்கியது. ஏராளமான திமுகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசிய ஜெ.அன்பழகன், காவிரி விவகாரத்தில் கடைசி நேரம் வரை காத்திருந்து அதிமுக அரசு கைவிரித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
6 வாரம் காத்திருந்து ஆளும் அதிமுக அரசு நேரத்தை வீணடித்துவிட்டதாகவும் , கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது என்று ஜெ.அன்பழகன் கூறினார்.
Patrikai.com official YouTube Channel