ராசிபுரம்: நாமக்கல் அருகே திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் தனது கணவர், மகளுடன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திமுக பெண் கவுன்சிலர் தனது கணவர் மற்றும் மகளுடன் தற்கொலை செய்துக் கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் பொம்மி தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருண்லால். நகைக்கடை அதிபராக இருந்து வருகிறார். மேலும், அந்த பகுதிய திமுக துணை செயலாளராக இருந்து வருகிwர்.. இவரது மனைவி தேவிப்பிரியா. இவர் ராசிபுரம் நகர மன்றத்தின் 13 ஆவது வார்டு மெம்பராக இருக்கிறார். இவர்களது மகள் மோனிஷா. மற்றொரு மகள் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், திமுக கவுன்சிலர் தேவிப்பிரியா, அவரது கணவர் அருண் லால், மகள் மோனிஷா ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த மோனிஷா ராசிபுரம் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்ததாக கூறப்படுகிறது.
அருண்லாலும், தேவிப்பிரியாவும், வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களின் 18 வயது மகள் மோனிஷா விஷமருந்திய நிலையில் சடலமாக மீட்கபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
3 பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து 3 பேரின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் டிஎஸ்பி டி.கே.கே. செந்தில்குமார், காவல் ஆய்வாளர் சுகவனம் உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களது தற்கொலைக்கு கடன் பிரச்னை காரணமா அல்லது கட்சி பிரச்சினையா என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.