’40 தொகுதிகளில் நாங்களே வெல்வோம்’’ என தி.மு.க.-அ.தி.மு.க.ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தினசரி வானிலை அறிக்கை வாசித்து கொண்டிருக்கின்றன.
‘’40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’’ என்று கமல், சீமான் போன்றோர் காமெடி தர்பார் நடத்தி வருகிறார்கள்.
உண்மையில் தமிழகத்தின் நிலவரம் என்ன?
‘டைம்ஸ் நவ் ‘ சேனல் நடத்திய கருத்து கணிப்பில் அதிரடி முடிவுகள் கிடைத்துள்ளன.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க.தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை அள்ளியது .இந்த முறை அப்படியே –தலை கீழ் மாற்றம்.
தி.மு.க.கூட்டணி 34 தொகுதிகளை கைப்பற்றும் என்று ‘டைம்ஸ் நவ்’ கணித்துள்ளது.
அ.தி.மு.க.கூட்டணிக்கு 5 இடங்களே கிடைக்கும்.
ஆந்திராவில் மொத்தமுள்ள 25 இடங்களில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெல்லும்.மிச்சமுள்ள 3 இடங்கள் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு கிடைக்கும்.
மற்ற மாநில நிலவரம் வருமாறு:
பீகார்:
மொத்த இடங்கள்:40
பா.ஜ.க.கூட்டணி:27
காங்கிரஸ் கூட்டணி:13
கர்நாடகம்:
மொத்த இடங்கள்:28
பா.ஜ.க.கூட்டணி:15
காங்கிரஸ் கூட்டணி:13
கேரளா:
மொத்த இடங்கள்:20
காங்கிரஸ் கூட்டணி:16
இடதுசாரிகள்: 3
(இங்கு பா.ஜ.க.ஒரு தொகுதியில் வென்று தனது கணக்கை முதன் முறையாக தொடங்கும்)
மகாராஷ்டிரா:
மொத்த இடங்கள்;48
பா.ஜ.க.கூட்டணி:39
காங்கிரஸ் கூட்டணி:9
தெலுங்கானா:
மொத்தம்:17
டி.ஆர்.எஸ்.:13
மற்றவை:4
உ.பி:
மொத்தம்:80
பா.ஜ.க.கூட்டணி:42
எஸ்.பி+பி.எஸ்.பி.:36
காங்கிரஸ்:2
தேசிய அளவில் பா.ஜ.க.கூட்டணிக்கு 283 தொகுதிகள் கிடைக்கும் என்றும்,காங்கிரஸ் கூட்டணிக்கு135 இடங்கள் கிடைக்கும் என்றும் அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
எந்த கூட்டணியிலும் சேராத கட்சிகள் 125 இடங்களை பெறும். இந்த லிஸ்டில்- அகிலேஷ், மாயாவதி, மம்தா, நவீன் பட்நாயக்,ஜெகன் மோகன் ,சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் அடக்கம்.
–பாப்பாங்குளம் பாரதி