புதுக்கோட்டை

மிழக போக்குவரத்துத் துறையினர் வழங்கும் அபராத ரசீதில் இந்தி மொழி உள்ளதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக போக்குவரத்துத் துறையினர் வழங்கி வந்த அபராத ரசீதில் முதலில் ஆங்கில மொழி மட்டுமே இடம் பெற்றிருந்தது.  தற்போது அந்த ரசீதில் இந்தி மொழியும்  இடம் பெற்றுள்ளது.  இதற்குத் தமிழ் ஆர்வலர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் வழங்கப்படும் ரசீதில் தமிழ் மொழி இல்லாததை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்று புதுக் கோட்டையில் ஒரு திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர், “தமிழக போக்குவரத்துத் துறையினர் வழங்கும் அபராத கட்டணத்துக்கான ரச்டீதில் தமிழ் மொழி இடம் பெறவில்லை.

மாறாக அந்த ரசீதில் ஆங்கிலம் மற்றும் இந்தி இடம் பெற்றுள்ளது.   இவ்வாறு இந்தி இடம் பெற்றதை திமுக கடுமையாக எதிர்க்கிறது   இதை மாற்றி தமிழில் ரசீது அளிக்க வேண்டும்.  அவ்வாறு செய்ய மறுத்தால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும்” என எச்சரித்துள்ளார்.