தமிழக சட்டமன்றத் தேர்தலில் 120 தொகுதிகளில் வென்று திமுக ஆட்சி அமைக்கும் என், மக்கள் ஆய்வு அமைப்பின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு அமைப்பினர், 177 தொகுதிகளில் கருத்துக்கணிப்புகளை நடத்தினார்கள். , அதன் முடிவுகளை சென்னையில் இன்று வெளியிட்டார்கள்.
திமுக 118 முதல் 120 தொகுதிகளிலும், அதிமுக 94 முதல் 96 இடங்கள் வரையிலும் வெற்றி பெறும், . தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி 8 தொகுதிகளை மட்டும் கைப்பற்றும் என்று இந்த கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 40.7 சதவீதம் பேரும், அதிமுகவிற்கு 31.8 சதவீதம் பேரும், தேமுதிக கூட்டணிக்கு 10.4 சதவீதம் பேரும், நோட்டாவிற்கு 5.5 சதவீதம் பேரும் கூறியுள்ளதாக ராஜநாகயம் தெரிவித்தார்.
திமுக அணி ஆட்சியமைக்க 42.7 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு 36.6 சதவீதம் பேரும், தேமுதிக கூட்டணிக்கு 7.9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் கருணாநிதி முதலமைச்சராக 41.1 சதவீதம் பேரும், ஜெயலலிதா முதலமைச்சராக 31.7 சதவீதம் பேரும், விஜயகாந்த் முதலமைச்சராக 10.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் ராஜநாகயம் கூறினார்.