சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு தொடர்பாக ஜூன் 24ந்தேதி சென்னையில் திமுக மாணவரணி போராட்டம் நடைபெறும் என திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் அறிவித்திருந்தார். அதனப்டி, அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை மறுதினம் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது இந்த போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு குறித்து நாடு முழுவதும் மாணவர்களும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஒரு மாணவி வேண்டுமென்றே வீடியோ வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாணவியின் வீடியோவை பிரியங்கா காந்தி பகிர்ந்துமேலும் பரபரப்பை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. மேலும், மாணவி மீண்டு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அந்த மாணவி மற்றும் அவர்களின் பெற்றோர்களையும் கடுமையாக கண்டித்தது. இதையடுத்து நீட் தேர்வு போராட்டம் கலகலத்து போய் உள்ளது.
இதற்கிடையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமாக எழுந்துள்ளது. இதுவரை 55 பேர் பலியான நிலையில், கள்ள மற்றும் விஷச்சாராயத்தை விற்பனை செய்தது திமுகவினர் என்பதும், அதை காவல்துறை வேடிக்கை பார்த்ததும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், திமுக மாணவரணி போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு முடிவுகள்முறைகேடு: ஜூன் 24ந்தேதி சென்னை திமுக மாணவரணி போராட்டம்