சென்னை: திமுக மாணவர் அணிச்செயலாளர் மற்றும் தலைவர் மாற்றம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
திமுக மாணவர் அணி செயலாளராக இருந்த எழிலரசன் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டு அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. மாணவர் அணி தலைவராக இருந்து வந்த ராஜீவ்காந்தி, கழக மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
திமுக மாணவர் அணிச்செயலாளராக இருந்த சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் தலைவராக இருந்ரத ராஜீவ்காந்தி மாற்றம் செய்து திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுரருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி,
தி.மு.க. மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும்திரு.சி.வி.எம்.பி.எழிலரசன்அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவித்து,கழக கொள்கைப் பரப்புச் செயலாளராகநியமிக்கப்படுகிறார்.
தி.மு.க. மாணவர் அணித் தலைவராக பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் இரா. ராஜீவ்காந்தி அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவித்து,கழக மாணவர் அணிச் செயலாளராகநியமிக்கப்படுகிறார்.