சென்னை: தமிழக 16வது சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில்,  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக, திமுக சார்பில் அப்பாவு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சட்டப் பேரவைச் செயலாளரிடம் தாக்கல் செய்தனர்.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து கடந்த 7ந்தேதி ஸ்டாலின் தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

அதைத்தொடர்ந்து, தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி அறிவிக்கப்பட்டார். அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும்  கவர்னர் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, இன்று சட்டசபை கூடியுள்ளது. தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவி ஏற்கும் வகையில்,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தனர்.

16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகை. பேரவையின் தற்காலிகத் தலைவர் கு.பிச்சாண்டிக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக, திமுக சார்பில் அப்பாவு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சட்டப் பேரவைச் செயலாளரிடம் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பதவிக்கு கு.பிச்சாண்டியை முன்மொழிந்து நீர் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மனு தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவைத் தலைவர்(சபாநாயகர்) மற்றும் துணைத் தலைவர்(துணை சபாநாயகர்) தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று(மே.11) பகல் 12 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லையெனில், அப்பாவு மற்றும் பிச்சாண்டி ஆகியோர் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டதாக, சட்டப்பேரவைச் செயலாளர் அறிவிப்பார்.

அதனைத் தொடர்ந்து நாளை(மே.12) காலை சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு பதவியேற்பார்.