சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து ராஜினாமா தமிழக அரசின் உயர்பொறுப்புகளில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய நாராயணன் ராஜினாமா ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளர் மற்றும் சட்டத்துறை செயலாளருக்கு அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து அந்த பதவிக்கு திமுகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் அரசின் தலைமை வழக்கறிஞராகநியமிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுபோல, காவல்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய சென்னை மாநகர காவல்ஆணையர் மகேஷ் அகர்வால் மாற்றப்பட உள்ளார். அவருக்கு பதிலாக சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னராக ஏ.டி.ஜி.பி.ரவி நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.