சென்னை: சமையல் கேஸ், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நாடுமுழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கட்ந்துள்ளது. அதுபோல சமையல் எரிவாயு விலையும் ரூ.800ஐ நெருங்கி உள்ளது. தமிழக்ததில் சமையல் காஸ் விலை ரூ.785 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் மத்தியஅரசு வழங்கும் மானியமும் ரூ.25 ஆக மட்டுமே உள்ளது. தொடர்ந்து எரிபொருட்கள் விலை உயர்ந்து வருவதால், உணவுபொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில், கேஸ், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக, அதிமுகவுக்கு எதிராக திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மாவட்ட தலைநகரங்களில் , அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் பாஜக , அதிமுக அரசுகளை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் செய்கிறது.
[youtube-feed feed=1]