சென்னை,
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர அத்தியாவசிய பொருட்களான பருப்பு, சமையல் எண்ணை போன்றவை கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் ரேஷன் கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
அதைத்தொடர்ந்து ரேஷன் கடைகளில் சரிவர பொருட்கள் வழங்கப்படாததை கண்டித்து அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு வரும் 13ம் தேதி (திங்கட்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை என்றும், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்பவது இல்லை என்பதை திமுக எம்எல்ஏ.க்கள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரேஷன் கடைகளில் சரிவரி பொருட்கள் வழங்காத அதிமுக அரசை கண்டித்து, வரும் திங்கட்கிழமை (13ந்தேதி) ரேஷன் கடைகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக-வினர் தவறாது பங்கேற்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.