சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிக்கு வேட்பாளர்கள் பட்டியலை தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தோழமை கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.
அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து, விஎஸ்.சம்பத்குமார் களமிறக்கப்பட்டு உள்ளது.
அதுபோல, துணைமுதல்வரான அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ்சை எதிர்த்து தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.