சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அவர் டிவிட் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.

தமிழக முதலமைச்சர் இன்று செம்மஞ்சேரி பகுதியில்  ரூ.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் & வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்தார். மேலும் மழை வெள்ளப் பாதிப்பினைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரி களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனால் முதல்வர் ஸ்டாலின் உடல் சோர்வையடைந்தது- அதையடுத்து, அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம். என தெரிவித்துள்ளார்.