சென்னை: 1996 – 2001  திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை 18 ஆண்டுகளுக்கு பிறகு,  மீண்டும் விசாரிக்க கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சமீபகாலமாக நீதிமன்றங்களின் விசாரணைகளும், தீர்பபுகளும் பொதுமக்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.  ஆட்சிகள் மாறும்போது, ஆட்சியாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதும், வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர் மற்றும் சாட்சிகள் பல்டியடிப்பதும் தொடர்ந்து வருகிறது. இதனால், சில முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில்,  கடந்தகால திமுக ஆட்சியின்போது சென்னை கட்டப்பட்ட மேம்பாலங்கள் தொடர்பான முறைகேடு தொடர்பாக,   மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. ரூ.115 கோடி முறைகேடு: கடந்த 1996 – 2001 திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் பல்வேறுஇடங்களில் மேம்பாலங் கள் கட்டப்பட்டதில் ரூ.115 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, கடந்த 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது

ஆனால், பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த வழக்குகளை சட்ட  பேரவைத் தலைவர் திரும்பப் பெற்றார்.  அதாவது, . 006-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கை தொடர அனுமதியளித்த உத்தரவை பேரவைத் தலைவர் திரும்பப்பெற்றதால் வழக்கு கைவிடப் பட்டது.

இந்த நிலையில்,   மேம்பால முறைகேடு தொடர்பாக தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்பொன்முடி ஆகியோருக்குஎதிரான வழக்கை திரும்பப்பெற்று பேரவைத் தலைவர் 2006-ம் ஆண்டு பிறப்பித் துள்ள உத்தரவை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் என்பவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமைநீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அப்போது நீதிபதிகள், பேரவைத் தலைவர் 18ஆண்டுகளுக்கு முன்பாகபிறப்பித்த உத்தரவை எதிர்த்து தற்போது வழக்குத் தொடர முடியுமா? என்பது குறித்து, முன்மாதிரி தீர்ப்புகளுடன் விளக்க மளிக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

வழக்கின் பின்னணி:

1996 – 2001 திமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராக மறைந்த கருணாநிதி இருந்தார். அதேசமயத்தில் சென்னை மாநகராட்சி மேயராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்தார். அப்போது,  சென்னையின் பல இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த  பாலம் கட்டியதில் ஊழல் செய்ததாக மொத்தம் 14 பேர் மீது  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வழக்குபதிவு  செய்து விசாரணை நடத்தியது. . இதில் முதல் குற்றவாளியாக சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் பெயரும், இரண்டாவது குற்றவாளியாக தி.மு.க. தலைவரும் முன்னாள்முதல்வருமான கருணாநிதியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.   புகாரை பெற்றதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மிக விரைந்து செயல்பட்டனர். கருணாநிதி, ஸ்டாலின் உட்பட 7 பேரை கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருணாநிதியை நள்ளிரவு காவல்துறையினர் இழுத்துச்சென்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேம்பால ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்டவர்களின் பெயர்கள்:

1. சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் 2. முன்னாள் முதல்வர் கருணாநிதி 3. முன்னாள் அமைச்சர் பொன்முடி 4. முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி 5. சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஜெகதீசன் 6. சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஆர்.எஸ்.ஸ்ரீதர் 7. மேயர் ஸ்டாலினின் உதவியாளர் ராஜா சங்கர் 8. எல் அண்டு டி நிறுவன தலைமை இஞ்ஜினியர் ராகவன் 9. சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைமை இன்ஜினியர் சேதுராமன், 10. சென்னை மாநகராட்சி தலைமை இஞ்ஜினியர் சீனிவாசன் 11. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் நம்பியார் 12. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முத்துசாமி 13. சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் கோலப்பன் 14. உள்ளாட்சித் துறை முன்னாள் செயலாளர் மாலதி.

இந்த  14 பேர் மீதும் 120பி – குற்றச் சதி 420- மோசடி, 409 – பொதுபணம் கையாடல், 13 (2), 13 (டி) – ஊழல் தடுப்புச் சட்டம், 167 ஆகிய 6 பிரிவுகளில்வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.