டெல்லி: 2022-23ம் ஆண்டின் மாநில கட்சிகளின் வருவாய் மற்றும் செலவினம் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் திமுக கட்சியின் வருவாய் ரூ.214.35 கோடி என்பது தெரிய வந்துள்ளது. அதிக வருவாய் பெரும் மாநில கட்சிகளில், நாட்டிலேயே திமுக 3வது இடத்தை பிடித்துள்ளது. அதிமுக ரூ.20.21 கோடி வருவாய் பெற்றுள்ளது.
பதிவுபெற்ற மாநில கட்சிகள் ஆண்டுதோறும் வருவு செலவு கணக்கினை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி கடந்த 2022-23ம் ஆண்டுக்கான கட்சி செலவினங்கள் குறித்த தகவல்களை மாநில கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கி உள்ளன. இந்த வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/annual-audit-report என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
2023, அக்டோபா் 31-ஆம் தேதியுடன் தங்களது வருடாந்திர தணிக்கை கணக்குகளை சமா்ப்பிக்க வேண்டுமென்ற தோ்தல் ஆணையத்தின் கெடுவை 16 கட்சிகள் மட்டுமே பின்பற்றியுள்ளன. பிற கட்சிகள் 3 முதல் 150 நாள்கள் வரை தாமதமாக இக்கணக்குகளை சமா்ப்பித்துள்ளன. தன்னாா்வ நன்கொடைகளே கட்சிகளின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாக காட்டப்பட்டுள்ளது. தங்களது வருவாயைவிட அதிகம் செலவிட்டுள்ளதாக 20 கட்சிகள் தெரிவித்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 57 மாநில கட்சிகளில் 39 கட்சிகளின் நிதி நிலைமையை (2022-23) பகுப்பாய்வு செய்து, ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 2022-23-ஆம் நிதியாண்டில் 39 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.1,740 கோடி என்றும், 2022-23-ஆம் நிதியாண்டில் மாநில கட்சிகள் செலவிட்ட மொத்த தொகை ரூ.481 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விவரங்களை காண தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/annual-audit-report என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்த பட்டியலில், நாட்டிலேயே அதிக வருவாய் பெற்றுள்ள கட்சியாக, தெலுங்கானவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி முதலிடத்தை பெபற்றுள்ளது. இந்த கட்சியானது 2022-23 ஆண்டில் மட்டும், ரூ.737 கோடி நிதி பெற்றுள்ளது. இந்த பட்டியலில், ரூ.214.35 கோடி நிதி பெற்று திமுக மூன்றாமிடம் பிடித்து உள்ளது. ரூ.181 கோடி வருவாயுடன் (10.40%) பிஜு ஜனதா தளம் (பிஜேடி) நான்காமிடத்திலும், ரூ.74.78 கோடி வருவாயுடன் (4.30%) ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஐந்தாமிடத்திலும் உள்ளன.
இந்த 5 கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.1,541.32 கோடி (88.56%). இதில் ரூ.1,285 கோடி தோ்தல் நிதி பத்திரங்கள் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதேவேளையில் தேர்தலி நிதியை அதிகம் செலவிட்ட மாநில கட்சிகளில் திரிணமூல் காங்கிரஸ் முதலிடத்தையும், 4வது இடத்தில் திமுகவும் இடம்பெற்றுள்ளது. ரூ.181.18 கோடி செலவு செய்து, செலவினத்தில் திரிணமூல் காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளது. ரூ.52.62 கோடி செலவு செய்து திமுக நான்காம் இடத்தில் உள்ளது.
இதில் ரூ.181.18 கோடி செலவுசெய்து (37.66%) திரிணமூல் காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளது. ரூ.79.32 கோடி செலவுடன் (16.49%) ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், ரூ.57.47 கோடி செலவுடன் (11.94%) பிஆா்எஸ், ரூ.52.62 கோடி செலவுடன் (10.94%) திமுக, ரூ.31.41 கோடி செலவுடன் (6.53%) சமாஜவாதி ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பிஆர்எஸ் கட்சி, ரூ.737 கோடி வருமானம் பெற்றபோதிலும், அதில் ரூ.680 கோடியை பிஆா்எஸ் செலவிடவில்லை. இதேபோல், பிஜு ஜனதா தளம் ரூ.171 கோடி, திமுக ரூ.161.72 கோடியை செலவிடவில்லை.
முதல் பத்து மாநில கட்சிகள் மாநில கட்சிகள் வருவாய் – செலவு (கோடியில்)
பிஆா்எஸ் ரூ.737.67 – ரூ.57.47
திரிணமூல் காங்கிரஸ் ரூ.333.45 – ரூ.181.18
திமுக ரூ.214.35 – ரூ.52.62
பிஜேடி ரூ.181 – ரூ. 9.98
ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ரூ.74.78 – ரூ. 79.32
தெலுங்கு தேசம் ரூ.63.99 – ரூ.12.31
சமாஜ்வாதி ரூ.32.95 – ரூ.31.41
அதிமுக ரூ.20.21 – ரூ.6.88
ஐக்கிய ஜனதா தளம் ரூ.16.85 – ரூ.5.07
இந்திய கம்யூனிஸ்ட் ரூ.15.32 – ரூ. 12.45
பிற 29 கட்சிகள் ரூ.49.82 – 32.29
திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரவு செலிவினம் கொடுத்த 23 பக்க அறிக்கையினை காண கீழே உள்ள பிடிஃஎப் (DMK AA 2022-23) பைலை ஒப்பன் செய்யவும்.
அனைத்து கட்சிகளின் வரவு செலவு குறித்த தகவல்களை பெற https://www.eci.gov.in/annual-audit-report என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
திமுகவிற்கு ரூ.509 கோடி தேர்தல் பத்திரம் மூலம் வழங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின்!