சென்னை

தார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.  இதன்படி 2023 ஏப்ரல், ஜூலை, அக்டோபர் 1-ம் தேதிக்குள் 18 வயதை அடைபவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாகப் பதிவு செய்ய முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டில் முன்திருத்தப் பணி தொடங்குகிறது.

தற்போதுள்ள வாக்காளர் விவரங்களுடன் தன்னார்வ அடிப்படையில் ஆதார் விவரங்களைச் சேகரித்து இணைத்து வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.  இதையொட்டி வாக்காளர் படிவம் ‘6பி’-ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாகவோ, அல்லது என்விஎஸ்பி இணையதளம் (https://www.nvsp.in), விஎச்ஏசெயலி (Voter Helpline App) மூலம் ஆன்லைனிலோ சமர்ப்பிக்கலாம். இந்த பணி ஆகஸ்ட் 1 தொடங்கி2023 ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பு நிறைவடையும்.

ஆகஸ்ட் 4 முதல் அக்டோபர் 24வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும்.  நவம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். நவம்பர் 9 முதல் டிசம்பர் 8 வரை பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கான படிவங்கள் பெறப்படும். இறுதி வாக்காளர் பட்டியல்2023 ஜனவரி 5-ல் வெளியிடப்படும்.”

எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது வாக்காளர் பட்டியலில் ஆதார எண்ணை இணைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதை அதிமுக,பாஜக, காங்கிரஸ், தேமுதிக ஆகிய கடசிகள் வரவேற்ற நிலையில், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.