டெல்லி: தலைநகர் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழா நடைபெறுகிறது. டெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 4.30 மணி அளவில் வந்தடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி.க்கள், தமிழ்நாடு அமைச்சர்கள் உள்பட முக்கிய திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்பர ஏராளமானோர் வந்துள்ளனர். தொடர்ந்து முக்கிய கட்சி தலைவர்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

Patrikai.com official YouTube Channel