டெல்லி:

.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட  11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி சார்பில் தொடரப்பபட்ட வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தலைமைநீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு,சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அதற்கான காலக்கெடுவும் கொடுக்க முடியாது,  சபாநாயகர் விரைவில் முடிவு எடுப்பார் என நம்புவதாகவும் என கூறி  வழக்கை பிப்ரவரி 14ந்தேதி முடித்து வைத்தது.

ஆனால், உச்சநீதி மன்றத்தில் அறிவுறுத்தலின்படி சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறார். இதனைச் சுட்டிக்காட்டி தி.மு.க தரப்பில் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,  அரசுக்கு எதிராக வாக்களித்த நபர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.